வீடியோவை தூக்கனும்; கோபி - சுதாகர் பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது பரபரப்பு புகார்!

Coimbatore Viral Video
By Sumathi Aug 07, 2025 10:47 AM GMT
Report

பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சொசைட்டி பாவங்கள்

கவின் ஆணவப் படுகொலை குறித்து பிரபல யூடியூபர்களான 'பரிதாபங்கள்' கோபி- சுதாகர் தங்கள் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோ பெரும்பாலானோரின் வரவேற்பை பெற்று வருகிறது.

gopi - sudhagar

சாதிய ரீதியிலான ஆணவப்போக்கை விமர்சிக்கும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ படு வைரலானது. யூடியூப்பில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை

இந்த வீடியோ பெற்றுள்ள நிலையில், பரிதாபங்கள் சேனலுக்கு எதிராக கோவை மாநகர காவல் ஆணையகரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில்,

நான் சொல்றவங்களை ஹீரோயினா கமிட் செய்யுங்க; ஹெச்.ராஜா சொன்னது - இயக்குநர் ஓபன்டாக்!

நான் சொல்றவங்களை ஹீரோயினா கமிட் செய்யுங்க; ஹெச்.ராஜா சொன்னது - இயக்குநர் ஓபன்டாக்!

சேனல் மீது புகார்

பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இரு சமூகத்தினர் இடையே பிரச்சனையை உருவாக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களை குறிப்பிட்டு அந்த சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள்.

society paavangal

அந்த வீடியோவை யூடியூப் தளத்தில் இருந்து நீக்க வேண்டும். மேற்கொண்டு இதுபோன்ற வீடியோக்கள் வெளியிடாதவறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர் பெயரில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.