Ullu உட்பட.. 25 ஓடிடி தளங்களுக்கு தடை - ஏன், எதெல்லாம் தெரியுமா?

Government Of India OTT Platforms
By Sumathi Jul 26, 2025 07:09 AM GMT
Report

 25 ஓடிடி தளங்களை மத்திய அரசு தடை செய்துள்ளது.

விதி மீறல்

நாடு முழுவதும் இந்த 25 ஆபாச செயலிகள், இணையதளங்களுக்கு அதிரடியாக தடை விதித்து மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Ullu உட்பட.. 25 ஓடிடி தளங்களுக்கு தடை - ஏன், எதெல்லாம் தெரியுமா? | Govt Bans 25 Ott Apps Why Were Ullu Banned List

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டில் ஆபாச படம் மற்றும் பிற ஆபாச உள்ளடக்கங்களை கொண்ட ஓடிடி தளங்கள், இணையதளங்கள், ஆபாச செயலிகள் என்று மொத்தம் 25 தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஆபாசத்தை விளம்பரப்படுத்தும் இணையதளங்கள், செயலிகளும் அடங்கும்.

யூடியூபர் இலக்கியா தற்கொலை முயற்சி - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

யூடியூபர் இலக்கியா தற்கொலை முயற்சி - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

மத்திய அரசு அதிரடி

அதன்படி ALTT, ULLU, Big Shots App, Desiflix, Boomex, Navarasa Lite, Gulab App, Kangan App, Bull App, Jalva App Wow Entertainment, Look Entertainment உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர Hitprime, Feneo, ShowX, Sol Talkies, Adda TV, HotX VIP, Hulchul App MoodX, NeonX VIP, Fugi, Mojflix, Triflicks உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Ullu உட்பட.. 25 ஓடிடி தளங்களுக்கு தடை - ஏன், எதெல்லாம் தெரியுமா? | Govt Bans 25 Ott Apps Why Were Ullu Banned List

இந்த இணையதளங்கள் மற்றும் செயலிகள் நம் நாட்டின் டிஜிட்டல் நெறிமுறைகளை மீறி உள்ளது. நம் நாட்டின் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ல் குறிப்பாக பிரிவு 67 மற்றும் 67 ஏ, பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 294 மற்றும் பெண்களை அநாகரீகமாக பிரதிநிதித்துவப்படுத்துதல் (தடை) சட்டம்,

1986 பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் இந்த ஓடிடி தளங்கள், இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து இணையதள சேவை வழங்குநர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.