தேனிலவில் கணவன் செய்த செயல்.. அலறியடித்து ஓடிய இளம்பெண் - நடந்தது என்ன?
தேனிலவில் கணவன் செயலால் அலறியடித்து இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
தேனிலவு
உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ரத்னேஷ் குப்தா. இவருக்குக் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி திருமணம் நடந்தது.இதனையடுத்து பிப்ரவரி 19 அன்று தேனிலவுக்காக ரத்னேஷ் குப்தாவும் அவரது மனைவியும் கோவாவிற்குச் சென்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் இளம்பெண் அலறியடித்துக் கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். அதில்,தனக்குத் திருமணம் முடிந்து மகிழ்ச்சியுடன் கணவர் வீட்டுக்குச் சென்றேன். ஆனால் பத்து நாட்களிலேயே கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு என்னைக் கடுமையாகத் தாக்கினர்.
உடனே எனது பெற்றோர்கள் நிலைமையை அமைதிப்படுத்தத் தனது கணவருடன் தேனிலவுக்காகக் கோவா அனுப்பி வைத்தனர்.ஆனால் தேனிலவு பயணத்தில் துன்பங்களைச் சந்தித்ததாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.கோவாவில் தேனிலவு சென்ற இடத்தில் நள்ளிரவில் அறையில் வைத்து தன்னை அடித்ததாகவும்,
இளம்பெண்
கணவர் தன்னை கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றதாகக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து அப்பெண் பெற்றோரிடம் காவல்துறையினர் கூறியுள்ளனர்.உடனடியாக மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கணவர் மற்றும் மாமியார் உட்பட 7 பேர் மீது தாக்குதல், வரதட்சணை துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.