பண மோசடி.. வீட்டிற்கு வெல்டிங்.. மிரட்டல் விடுத்த நடிகர் பிரபுதேவாவின் தம்பி - பரபரப்பு!

Vinothini
in பிரபலங்கள்Report this article
நடிகர் வீட்டை பூட்டி மிரட்டியது குறித்த புகார் எழுந்துள்ளது.
வாடகை வீடு
சென்னை, தி.நகரில் உள்ள ஒரு தனியார் ரெஸ்டாரண்டில் மேனேஜராக பணியாற்றி வருகிறார் விக்னேஷ். இவரது மனைவி தரணி, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் விக்னேஷ் வீடு இல்லாமல் தேடியபோது, தேனாம்பேட்டை ஜெயம்மாள் தெருவில் உள்ள பிரபல நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத்தின் வீடு காலியாக இருப்பதை பார்த்துள்ளார்.
வீட்டை லீசுக்கு கேட்க நாகேந்திர பிரசாத்தை தொடர்பு கொண்டபோது அவரது மனைவி ஹேமா பிரசாத் பேசிள்ளார். அப்பொழுது STSK பிராபர்ட்டி டெக் என்ற நிறுவனம் தனக்கு கேர் டேக்கராக லீசுக்கான தொகை 25 லட்சம் ரூபாய் மற்றும் மாதம் 36,000 வீதம் 2 வருடத்திற்கு கொடுத்துவிடும் என தெரிவித்துள்ளார்.
சீல் வைத்த நடிகர்
இந்நிலையில், அவருக்கு கேர் டேக்கராக இருந்த நிறுவனம் ஒரு வருடம் மட்டும் பணத்தை கொடுத்துவிட்டு ஏமாற்றிவிட்டது. அதனால் இன்று மாலை விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாதபோது, நடிகர் நாகேந்திர பிரசாத்தின் ஆட்கள் சிலர் விக்னேஷின் வீட்டை பூட்டிவிட்டு வெல்டிங் செய்துவிட்டு சென்றுள்ளனர். இதனால் விக்னேஷ் தனது குடும்பத்தினருடன் வீடு இல்லாமல் வெளியே தவித்து வருகிறார்.
இது குறித்து அவர், கடந்த ஒரு வருடமாக வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் நாகேந்திர பிரசாத் தன்னை மிரட்டி வருவதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இன்று தனது வீட்டை பூட்டி வெல்டிங் செய்துவிட்டு சென்றுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அவர் தனது நாயை உள்ளே வைத்து பூட்டியுள்ளதால் உணவில்லாமல் தவிக்கிறது, இதற்கு போலீசார் தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.