மின்விசிறி, தொலைக்காட்சி உடைப்பு - அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Anbumani Ramadoss Tamil nadu
By Swetha Jul 20, 2024 06:00 AM GMT
Report

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அன்புமணி ராமதாஸ்

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே பாமக சார்பில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்தது.

மின்விசிறி, தொலைக்காட்சி உடைப்பு - அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு! | Complain Filed Against Anbumani Ramadoss

மேலும் அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வக்கீல் பாலு, சிவக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., திருக்கச்சூர் ஆறுமுகம், சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் வடிவேல் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

வெற்றி சாத்தியமாகவில்லை.. களம் இன்னும் சாதகமாகவே உள்ளது - அன்புமணி ராமதாஸ்!

வெற்றி சாத்தியமாகவில்லை.. களம் இன்னும் சாதகமாகவே உள்ளது - அன்புமணி ராமதாஸ்!

வழக்குப்பதிவு

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அந்த போராட்டத்தின் போது, மாவட்ட செயலாளர் பிரதீப், இலவச தொலைக்காட்சி, மின்விசிறி ஆகியவற்றை தூக்கிப்போட்டு உடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்விசிறி, தொலைக்காட்சி உடைப்பு - அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு! | Complain Filed Against Anbumani Ramadoss

இந்த சமயத்தில் பங்கேற்ற பா.ம.க.வினர் பலரும் மின்விசிறி, தொலைக்காட்சியை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது எழும்பூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.