தவறான கருத்தரிப்பு சிகிச்சை - பெண்ணுக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்னுக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவறான சிகிச்சை
இலங்கையைச் சேர்ந்தவர் ஃப்ளோரா. இவர் கருத்தரிப்பு சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அங்கு அவருக்கு 2013-ஆம் ஆண்டில் கருப்பையில் கட்டி வளர்வதாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு அடிவயிற்றில் வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால், மற்றொரு மருத்துவமனையில் சோதனை செய்தபோது பெருங்குடலில் நிரந்தர சேதம் ஏற்பட்டது தெரியவந்தது.
இழப்பீடு
அதனயடுத்து, இதுதொடர்பாக அந்தப் பெண் வழக்கு தொடர்ந்தார். அதில், 40 லட்சம் ரூபாயும், அதற்கு 2014ஆம் ஆண்டு முதல் 12 சதவீத வட்டியையும் சேர்த்து இழப்பீடாக வழங்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு நீதிபதி ஜி. சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.