'ஜெய்பீம்' எதிரொலி; நிஜத்தில் பாதித்தோருக்கு இழப்பீடு-அரசுக்கு நீதிமன்றம் கட்டளை!

Suriya Madras High Court
By Swetha Apr 20, 2024 10:52 AM GMT
Report

’ஜெய்பீம்’ படத்தின் உண்மை சம்பவத்தில் காவல் துறையினரால் பாத்தித்தோருக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'ஜெய்பீம்' எதிரொலி

நடிகர் சூர்யா,மணிகண்டன்,லிஜோமோல் உள்ளிட்டோர் நடித்து "ஜெய் பீம்" திரைப்படம் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் ராஜகண்ணு மரணத்துக்கு நீதி கேட்டு அவரது மனைவி பார்வதி 1993-ல் நடத்திய சட்டப் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உண்மை சம்பவத்தை வைத்து தயாரிக்கப்பட்டது.

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் மாவட்டம், கம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகண்ணு என்பவர் காவல் துறையினர் சித்ரவதையில் உயிரிழந்தார். இது தொடர்பாக ராஜகண்ணு மனைவி பார்வதி தாக்கல் செய்த வழக்கில், விசாரித்த நீதிபதிகள் உத்தரவின்படி, காவல் துறையினருக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கில் காவல் துறையினர் சிலருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. அதே சமயத்தில், பாதிக்கப்பட்ட ராஜகண்ணுவின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு இடைக்கால இழப்பீடு வழங்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெய் பீம் படத்திற்கு இதனால் தான் விருது இல்லை...திருமா கருத்து

ஜெய் பீம் படத்திற்கு இதனால் தான் விருது இல்லை...திருமா கருத்து

பாத்தித்தோருக்கு இழப்பீடு

அதன்பேரில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாயும், ராஜகண்ணுவின் சகோதரி ஆச்சிக்கு 50 ஆயிரம் ரூபாயும், ஆச்சியின் மகன் குள்ளனுக்கு 25 ஆயிரம் ரூபாயும், மற்றொரு மகன் குளஞ்சியப்பன் உள்பட ஐந்து பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில், காவல் துறையினரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொது சட்டப்படி இறுதி இழப்பீடு வழங்கக் கோரி, ராஜகண்ணுவின் சகோதரி மகன் குளஞ்சியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், தனது மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சிறப்பு சட்டத்தின் கீழ் வீட்டுமனை மற்றும் நிவாரணங்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' குறிப்பிட்டுள்ளார்.