அலுவகத்தில் 110 ஊழியர்கள்.. ஆனால் 99 பேர் பணிநீக்கம் - காரணம் கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
அலுவகத்தில் 90% ஊழியர்களை ceo பணிநீக்கம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர்கள்
அமெரிக்காவில் செயல்ப்பட்டு வரும் ஒரு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பால்ட்வின் என்ற நபர் இயங்கி வருகிறார். இவர் அன்றைய நாள் காலையில் ஒரு ஆலோசனை குழு நடத்தப்போவதாக ஊழியர்களுக்கு மின்னஞ்சலில் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்கூட்டியே இந்த கூட்டம் முடிவு செய்யப்பட்டு அழைப்புவிடுத்திருந்த நிலையில், அந்த கூட்டத்திற்கு 11 பேர் மட்டுமே இணையம் வாயிலாக கலந்துகொண்டுள்ளனர். மொத்தமாக 110 ஊழியர்களை கொண்டுள்ள இந்த நிறுவனத்தில் வெறும் 11 பேர் பங்கேற்றதால்
கடும் ஆத்திரமடைந்த தலைமை செயல் அதிகாரி மீதமுள்ள 99 பேருக்கும் பணி நீக்கம் கடித்ததை அணுப்பியுள்ளார். அதில் அந்த பணிநீக்கம் கடிதத்தை பெற்ற ஒரு நபர் இணையத்தில் அதனை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த மின்னஞ்சல் கடித பதிவு இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
பணிநீக்கம்
அந்த கடித்தத்தில் கூறப்பட்டிருப்பது, "இன்று காலை ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்காதவர்கள், இதனை அதிகாரப்பூர்வ நோட்டீஸாக கருதிக்கொள்ளுங்கள். நீங்கள் செய்வதாக ஒப்புக்கொண்ட விஷயத்தை செய்யத் தவறிவிட்டீர்கள்.
ஒப்பந்தப்படி உங்கள் பணியின் ஒரு பகுதியை செய்யத் தவறிவிட்டீர்கள். நீங்கள் கலந்துகொள்ள வேண்டிய கூட்டத்தில் பங்கெடுக்கத் தவறிவிட்டீர்கள். நமக்கு இடையிலான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்கிறேன்.
நிறுவனத்துக்குச் சொந்தமானது ஏதாவது உங்களிடமிருந்தால், தயவு செய்து ஒப்படையுங்கள். நிறுவனத்திலிருந்து உங்கள் கணக்குகளை வெளியேற்றுங்கள். உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக்கிக்கொள்ள நான் வாய்ப்பளித்தேன்.
ஆனால், நீங்கள் அதனை தவறவிட்டீர்கள். 110 பேரில் 11 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். அந்த 11 பேர் மட்டுமே வேலையில் தொடருவார்கள். எஞ்சிய அனைவரும் பணியிலிருந்து நீக்கப்படுகின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.