Please அந்த நாள்.. விட்டுருங்க சார் என கெஞ்சிய மாணவி - அத்துமீறிய ஆசிரியரின் பகீர் ஆடியோ!

Tamil nadu Sexual harassment Crime
By Sumathi Dec 15, 2022 04:22 AM GMT
Report

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரின் ஆடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை

நாகை, புத்தூர் பகுதியில் பாஜக மாவட்ட தலைவர் கார்த்திகேயனுக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அங்கு உடற்கூறியியல் ஆசிரியராக பணிபுரியும் சதிஷ் என்பவர் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

Please அந்த நாள்.. விட்டுருங்க சார் என கெஞ்சிய மாணவி - அத்துமீறிய ஆசிரியரின் பகீர் ஆடியோ! | Audio Of Teacher Sexually Harassing Student Nagai

மேலும், அந்த கல்லூரியில், மாணவர்களும், மாணவிகளும் பேசிக்கொள்ள கூடாது என்ற விதி உள்ள நிலையில் ஆண்களிடம் பேசும் மாணவிகளை சதிஷ் தனியாக அழைத்து கண்டித்து வருவதாக சொல்லப்படுகிறது.

பகீர் ஆடியோ

இந்நிலையில், மாணவி ஒருவரிடம் ஆசிரியர் வீட்டிற்கு வருமாறு அழைத்து பேசிய செல்போன் உரையாடம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், அந்த பெண் நான் கல்லூரிக்கு வருகிறேன் சார் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து தொல்லை தாங்கமுடியாமல், தனக்கு மாதவிடாய் வலி இருப்பதாக சொல்லி அந்த பெண் சமாளிக்கவே அதையும் புரிந்து கொள்ளாத ஆசிரியர் பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் வா என்று கட்டாயப்படுத்தியுள்ளார்.

அதனையத்து, கல்லூரி மாணவிகளிடம் தனித்தனியே வாக்குமூலம் எழுதி வாங்கிய அதிகாரிகள் கல்லூரி தாளாளர் முதல்வர் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சதீஷை கல்லூரி பணிநீக்கம் செய்துள்ளது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.