பணியில் ஊழியர்கள் செய்த செயல்; டெக்னாலஜி வைத்து பிடித்த நிறுவனம் - அடுத்து என்ன ஆனது?
வேலை செய்யாமல் ஏமாற்றியவர்களை நிறுவனம் ஒன்று பணிநீக்கம் செய்துள்ளது.
பணி ஊழியர்கள்
உலகில் வேலை கிடைப்பதே அரிதாகிவிட்டது. அப்படி இருந்தும் கிடைத்தக வேலையை தக்க வைக்காமல் சிலர் போலியாக வேலை செய்வதை போல் நடிப்பதை பார்த்திருக்கலாம். அதுவும் தொழில்நுட்பங்கள் வளர்ந்த இந்த காலத்தில் அப்படி ஏமாற்றுபவர்களை கண்டறிந்து சில நிறுவனங்கள் அவர்களை பனி நீக்கம் செய்து வருகிறதாம்.
அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் அமைந்துள்ள Wells Fargo வங்கியில் நடந்துள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்காவின் ஒரு நிதிசார்ந்த நிறுவனமாகும். இது, 35 நாடுகளில் இயங்குவதுடன், உலகம் முழுவதும் 70 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்துவருகிறது.
இங்கு பணியாற்றும் ஊழியர்களை, அந்நிறுவனம் கொரோனா காலகட்டத்தில் வீட்டில் இருந்தே பணி செய்யுமாறு கூறியுள்ளது. இந்த நிலையில் சிலர் பணி செய்வதுபோல் போலியாக நடித்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அப்படி செய்த 12கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
பிடித்த நிறுவனம்
தற்போது பல நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக தங்களது ஊழியர்கள் முறையாக வேலை பார்க்கின்றனரா என்று கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில், ஊழியர்களை தொடர்ந்து வீடியோ காலில் பேசுவது, பணியில் ஸ்கிரீன்ஷாட்களை எடுக்கச் சொல்வது,
கீபோர்டு ஸ்ட்ரோக்குகளை பதிவு செய்வது, கண் விழி அசைதலை பதிவு செய்வது போன்ற செயல்களை தொடர்ந்து செய்துவருகின்றனர். இப்போது இந்த விஷயங்களை எல்லாம் மீறி புது டெக்னாலஜி வளர்ந்துவிட்டது.
மவுஸ் ஜிக்லர்ஸ் என்பது மூலம் தங்களது கம்ப்யூட்டர்கள் பயனில் இருப்பது போன்ற தோற்றத்தை ஊழியர்கள் ஏற்படுத்தி, வேலை செய்வதாக தெரியவந்துள்ளது. இது பற்றி தெரியவந்த Wells Fargo வங்கி நிறுவனம் வேலையிலிருந்து அவர்களை நீக்கியுள்ளது.