நோம்பு கஞ்சால் தகராறு; இருதரப்பினர் பயங்கர மோதல் - பள்ளிவாசலில் பதற்றம்!

Kanyakumari
By Swetha Apr 02, 2024 10:00 AM GMT
Report

 பள்ளிவாசலில் நோன்புக் கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முஸ்லிம்கள் மாேதிக் கொண்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நோன்புக் கஞ்சி

கன்னியாகுமரி-நாகர்கோவில் நெடுஞ்சாலையில் மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் அமைந்துள்ளது.

நோம்பு கஞ்சால் தகராறு; இருதரப்பினர் பயங்கர மோதல் - பள்ளிவாசலில் பதற்றம்! | Communal Clashes Erupt In Kanyakumari

இந்தப் பள்ளிவாசலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே ஏற்கனவே நீண்ட கால பிரச்சனை இருந்து வந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக ரமலான் காலத்தில் நோன்புக் கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக முஸ்லிம்களில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் இந்த பிரச்சனை ஏற்பட்டதில், கன்னியாகுமரி டிஎஸ்பி தலைமையிலான ஒரு குழு அமைக்கப்பட்டு இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

பயங்கர மோதல்

இந்த சூழலில், இன்று மீண்டு நோன்புக் கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சனை வலுப்பெற்றது. அப்போது, பள்ளிவாசலில் இருதரப்பு முஸ்லிம்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் கல்லாலும், கைகளாலும் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

நோம்பு கஞ்சால் தகராறு; இருதரப்பினர் பயங்கர மோதல் - பள்ளிவாசலில் பதற்றம்! | Communal Clashes Erupt In Kanyakumari

இதையடுத்து, அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இருப்பினும்,.போலீஸ் முன்னாள் ஆண்களும் பெண்களும் தாக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில், பலத்த காயமடைந்த 5 பெண்கள், 5 ஆண்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.