ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை
இஸ்லாமியர்களின் பண்டிகளைகளில் மிக முக்கியானது ரம்ஜான். ரமலான் மாத தொடக்கத்தில் வானில் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள்.
இஸ்லாமியர்கள் நோன்பு
நோன்பு முடிந்து மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சாப்பிடுவதோடு சரி, அதன் பின்னர் சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் இருக்க வேண்டும். பிறை கணக்குப்படி 29 அல்லது 30 நாட்கள் வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பர்.
அதன்படி அதன்படி ரமலான் நோன்பு கடந்த மாதம் 24-ந்தேதி முதல் தொடங்கிய நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவூதீன் முகமது அயூப் அறிவித்தார், அதன்படி புனித ரமலான் இன்று கொண்டாடப்படுகின்றது.
ஜானாதிபதி வாழ்த்து
இஸ்லாமியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஈத் புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது. இந்த பண்டிகை அன்பு, இரக்கம் மற்றும் பாசம் போன்ற உணர்வுகளை பரப்புகிறது. ஈத் ஒற்றுமை மற்றும் பரஸ்பர நல்லிணக்கத்தின் செய்தியை வழங்குகிறது.
சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளை மேம்படுத்த இந்த நாளில் உறுதிமொழி எடுப்போம். ஈத்-உல்-பித்ரின் புனிதமான சந்தர்ப்பத்தில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.