இது எங்கள் வாழ்வாதாரம் சார் - தயவு செஞ்சி காப்பாத்துங்க..! அமைச்சரின் காலில் விழுந்து கெஞ்சிய பெண்கள்..!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கரின் காலில் பெண்கள் திடீரென காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் விவகாரம்
சென்னை கோயம்பேட்டில் இருந்து பேருந்து நிறுத்தம் கிளாம்பாக்கம் மாற்றப்பட்டுள்ளது கடும் நெருக்கடிகள் அரசிற்கு எழுந்து வருகிறது.
இந்த சூழலில் தான், இன்று முதல் செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் வழியாக செல்லக்கூடிய தென் மாவட்ட பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து சென்று வரும் என அறிவிக்கப்பட்டு, அது நடைமுறைக்கும் வந்துள்ளது.
காலில் விழுந்த பெண்கள்
அதனை தொடர்ந்து, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். அமைச்சர் ஆய்வு மேற்கொண்டிருந்த போதே, கடை வைத்திருக்கும் வியாபாரிகள் சில பெண்கள் திடீரென அமைச்சர் சிவசங்கரன் காலில் விழுந்து, கண்ணீர் மல்க கொள்கை வைத்தனர்.
தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என அந்த பெண்கள் தெரிவித்தனர். முன்னர் பேருந்துகள் பெருங்களத்தூர் பகுதியில் கடை வைத்திருப்பதாகவும்
ஆனால் தற்போது பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் காரணத்தால், தாங்கள் செய்வது அறியாமல் தவித்திருப்பதாகவும், தற்போது தங்களுக்கு கடை ஒதுக்க மறுத்துவிட்டார்கள் என தெரிவித்தனர்.