காமன்வெல்த் 2022 - ஒரே நாளில் இந்தியாவுக்கு 4 பதக்கம்!

Badminton India Commonwealth Games
By Sumathi Aug 03, 2022 06:23 AM GMT
Report

காமன்வெல்த் போட்டியின் 5-வது நாளில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் உள்பட 4 பதக்கம் கிடைத்துள்ளது.

காமன்வெல்த் 

22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. 4-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் ஆக மொத்தம் 9 பதக்கம் பெற்று இருந்தது.

காமன்வெல்த் 2022 - ஒரே நாளில் இந்தியாவுக்கு 4 பதக்கம்! | Commonwealth Games India Got 4 Medals In One Day

5-வது நாளில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் உள்பட 4 பதக்கம் கிடைத்தது. லான்பவுல்ஸ் பந்தயத்தில் ரூபா ராணி , லவ்லி சவுபே, நயன்மோனி , பிங்கி சிங் ஆகியோரை கொண்ட இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது.

ஒரே நாளில் 4 பதக்கம்

டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் சரத்கமல், ஜி.சத்யன் , ஹர்மித் தேசாய், சனில்ஷெட்டி ஆகியோர் அடங்கிய அணி தங்கப்பதக்கம் பெற்றது. பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் விகாஸ் தாக்கூர் ( 96 கிலோ ) வெள்ளி பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் 2022 - ஒரே நாளில் இந்தியாவுக்கு 4 பதக்கம்! | Commonwealth Games India Got 4 Medals In One Day

பேட்மின்டன் போட்டியில் பி.வி‌.சிந்து, காயத்ரி கோபிசந்த், அஸ்வினி பொன்னப்பா , திரிஷா ஜோலி , ஆகர்ஷி காஷ்யப், ஸ்ரீகாந்த் கிடாம்பி , சாத்விக் சாய்ராஜ் ரன்கிர் ரெட்டி , சுமித் ரெட்டி, லக்‌ஷயா சென் , சிராக் ஷெட்டி ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது.

6-வது இடத்தில் இந்தியா

நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டியில் 1-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோற்றது. முதலில் நடந்த இரட்டையர் ஆட்டத்தில் ரன்கிர் ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 15-21 என்ற கணக்கில் தோற்றனர். 2-வது ஆட்டத்தில் பி.வி.சிந்து 22-20, 21-17 என்ற கணக்கில் யாங்கை வீழ்த்தினார். 

இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஸ்ரீகாந்த் கிடாம்பி 19-21, 21-6, 16-21 என்ற கணக்கில் தோற்றார். இதே போல திரிஷா ஜோலி-காயத்ரி ஜோடியும் 18-21, 17-21 என்ற கணக்கில் தோற்றனர்.

 இந்திய அணி இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் ஆக மொத்தம் 13 பதக்கம் பெற்று தொடர்ந்து 6-வது இடத்தில் உள்ளது.