காமன்வெல்த் போட்டி - ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய 2 தமிழக வீராங்கனைகள் நீக்கம்
காமன்வெல்த் விளையாட்டு
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி, வரும் 28ம் தேதி, இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற உள்ளது. இப்போட்டி வரும் 28ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 8ம் தேதி வரை நடக்க உள்ளது.
காமன்வெல்த் போட்டிகளில் சுமார் 72 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. இப்போட்டியில், தடகளம், பேட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் இடம்பெறுகின்றன. சுமார் 6,500 வீரர்கள் மற்றும் குழு நிர்வாகிகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
வீரங்கனைகள் 2 பேர் நீக்கம்
இந்நிலையில், காமன்வெல்த் போட்டிக்காக ஊக்கமருந்து சோதனை தமிழக வீரங்கனைகள் 2 பேர் சிக்கியுள்ளனர். இதனையடுத்து, 2 வீராங்கனைகளும் காமன்வெல்த் அணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 4x100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனலட்சுமி தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவர் ஊக்கமருந்து பரிசோதனை சிக்கியுள்ளதால் தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், ட்ரிபிள் ஜம்ப் வீராங்கனை ஐஸ்வர்யா பாபுவும் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளதால் இவரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.