சரமாரியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு பாருங்க!

Tamil nadu LPG cylinder LPG cylinder price
By Sumathi Apr 01, 2025 03:53 AM GMT
Report

வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது.

சிலிண்டர் விலை 

வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலையை உலக மார்க்கெட் நிலவரத்தை பொருத்து, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன.

gas cylinder price

கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசும் அனுமதி கொடுத்துள்ளது. எரிவாயு சிலிண்டர் என்பது வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் என இரண்டு வகையாக உள்ளது.

இனி தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு - எப்போதிருந்து தெரியுமா?

இனி தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு - எப்போதிருந்து தெரியுமா?

குறைவு

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது.

commercial cylinder

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.43.50 குறைந்து ரூ.1,921.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படாமல், கடந்த மாதம் இருந்த ரூ.818.50 என்ற விலையே நீடிக்கிறது.