மாத முதலிலேயே மகிழ்ச்சி: சிலிண்டர் விலை குறைவு - எவ்வளவு தெரியுமா?

India LPG cylinder price
By Sumathi Apr 01, 2024 04:55 AM GMT
Report

வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு விலை 30 ரூபாய் குறைந்துள்ளது.

சிலிண்டர் விலை

சர்வதேச விலை நிலவரத்துக்குத் தகுந்தபடி எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கேஸ் விலையை மாதத்தின் முதல் நாளில் மாற்றி வருகின்றன.

cylinder price

அதன்படி, சென்னையில் கடந்த மாதம் 19 கிலோ சிலிண்டர் விலை, ரூ.1960. 50 காசுகளாக இருந்தது. தற்போது, 30 ரூபாய் 50 காசுகள் குறைந்து 1930 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

கேஸ் சிலிண்டரில் வந்த மாற்றம்; ரேட் எவ்வளவு பாருங்க - குஷியில் கஸ்டமர்ஸ்!

கேஸ் சிலிண்டரில் வந்த மாற்றம்; ரேட் எவ்வளவு பாருங்க - குஷியில் கஸ்டமர்ஸ்!

குறைவு

வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 818 ரூபாய் 50 காசுகள் என்ற அளவிலேயே விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மும்பையில் ரூ.1719க்கு விற்பனையாகி வருகிறது.

மாத முதலிலேயே மகிழ்ச்சி: சிலிண்டர் விலை குறைவு - எவ்வளவு தெரியுமா? | Commercial Cylinder Rate Down Details

மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், திடீரென வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.