திடீரென குறைந்த சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?
Tamil nadu
LPG cylinder price
By Sumathi
வணிக பயன்பாடு சிலிண்டர் விலை இந்த மாசமும் குறைந்துள்ளது.
சிலிண்டர் விலை
சர்வதேச சந்தையில் இந்தியா பண மதிப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கேஸ் சிலிண்டர் விலைகள் மாதத்திற்கு ஒருமுறை அல்லது தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்படும். அதன்படி, வணிக பயன்பாடு சிலிண்டர் விலை இந்த மாசமும் குறைந்துள்ளது.
குறைவு
சிலிண்டருக்கு 39 ரூபாய் 50 பைசாவை குறைத்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. தொடர்ந்து, அமலுக்கும் வந்துள்ளது.
இதனையொட்டி, சிலிண்டர் சிலை ரூ.1,929-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.