அப்பா இறந்ததுக்கு கூட போகல; பணத்திற்காக இப்படியா? கோவை சரளாவின் அதிர்ச்சி காரணம்!
நடிகை கோவை சரளா, தனது தந்தை இறந்ததுக்கு கூட செல்லாதது குறித்து பகிர்ந்துள்ளார்.
கோவை சரளா
வெள்ளி ரதம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கோவை சரளா. இந்த படத்தை தொடர்ந்து முந்தானை முடிச்சு, வைதேகி காத்திருந்தாள், ஆகிய வெற்றிப்படங்களில் நடித்தார்.
கவுண்டமணி, செந்தில், வடிவேலு, உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமல்லாது, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
தந்தை இறப்பு
சமீபத்தில் செம்பி, டபுள் டக்கர் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், கோவை சரளா படப்பிடிப்பிற்காக ஊட்டி சென்றிருந்தபோது அவரது தந்தை இறந்துள்ளார். தந்தை இறந்த செய்தி கேட்டும் அவர் செல்லாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.
ஏனெனில் அவர் நடிக்கும் படத்தை சின்ன தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரித்து வந்துள்ளது. தான் சென்றுவிட்டால் அவர்களுக்கு இழப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு தந்தை மறைவுக்கு கூட செல்லாமல் அவர் ஷூட்டிங்கில் தொடர்ந்து பங்கேற்றுள்ளார்.
ஆனால், அவர் பணத்திற்காக தான் இப்படி செய்தார் என்று அந்த சமயத்தில் தன்னை விமர்சித்ததாக வருத்தம் தெரிவித்துள்ளார்.