58 வயசாச்சு; திருமணம் செஞ்சுக்காத கோவை சரளா - யார் காரணம் தெரியுமா?
கோவை சரளா திருமணம் செய்துக்கொள்ளாத காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கோவை சரளா
“வெள்ளி ரதம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கோவை சரளா. இந்த படத்தை தொடர்ந்து முந்தானை முடிச்சு, வைதேகி காத்திருந்தாள், ஆகிய வெற்றிப்படங்களில் நடித்தார்.
கவுண்டமணி, செந்தில், வடிவேலு, உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமல்லாது, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் செம்பி, டபுள் டக்கர் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
திருமணம்?
ஆனால் 58 வயதை கடந்த நிலையில் இவர் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். கோவை சரளா அவரது குடும்பத்தின் மூத்த மகள் அவர்களுக்கு நான்கு சகோதரிகள் இருக்கிறார்கள்.
தனது சகோதரிகளின் திருமணத்திற்கு உதவி, அவர்களின் குழந்தைகளின் கல்வி உட்பட்ட அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொண்டார்.
மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் தனது வாழ்நாள் முழுவதையும் செலவிடுவதையே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.