சைலண்டாக திருமணத்துக்கு ரெடியாகும் பிரபாஸ் - அனுஷ்கா - தீயாய் பரவும் தகவல்!
பிரபாஸ் - அனுஷ்கா திருமணத்திற்கு ரெடியாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபாஸ் - அனுஷ்கா
சில வருடங்களாகவே பிரபாஸுக்கும் அனுஷ்காவுக்கும் இடையே காதல் இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இருவரும் லிவிங்கில் இருப்பதாக கூட செய்திகள் வெளியாகின.
இருவரும் 40 வயதை கடந்துள்ள நிலையில், எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.
திருமணம்
ஆனால் இதுகுறித்து ஒருமுறை பேசியுள்ள அனுஷ்கா, ”எங்களுக்குள் காதல் இல்லை, நாங்கள் இருவருமே நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம்” என்றார். இந்நிலையில், இருவரும் காதலிக்க தொடங்கி இருப்பதாகவும். இவர்கள் இருவரது திருமண நிச்சயதார்த்தம் வருகிற மார்ச் மாதம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, ஏப்ரலில் திருமணம் செய்ய இருப்பதாகவும் டோலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. தற்போது இவர்களது திருமண தகவல் பேசுபொருளாகியுள்ளது.