16 வயசுலே கல்யாணம்; அவரோடு சேர்த்துவைத்து சந்தேகம், டார்ச்சர் - முதல் கணவர் குறித்து காமெடி நடிகை வேதனை!

Sumathi
in பிரபலங்கள்Report this article
முதல் கணவரால் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து காமெடி நடிகை சுமதி தகவல்கள் பகிர்ந்துள்ளார்.
காமெடி நடிகை சுமதி
நகைச்சுவை நடிகையான சுமதி நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். அதன்மூலம் பிரபலமானவர்தான். ஐயா, கருப்பசாமி குத்தகைதாரர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், எனக்கு 16 வயதிலேயே திருமணம் நடந்தது. சொந்த மாமாவைத்தான் திருமணம் செய்துவைத்தார்கள். ஆனால், அவர் வேலைக்கு போக மாட்டார் எங்களுக்குள் எப்போதும் சண்டைதான் வரும்.
சினிமா ஆசை
என் சொந்தக்காரர் ஒருவருடன் என்னை சேர்த்துவைத்து பேசி, சந்தேகப்பட்டு டார்ச்சர் செய்தார். ஒரு அளவுக்கு மேல என்னால் பொருத்துக்கொள்ள முடியாமல், மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சென்னையில் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு ஒரு வீட்டில் வாழ்ந்தோம்.
அப்போது தான் எனக்கு சினிமாவில் நடிக்கும் ஆசைவந்தது.
நான் பிஸியாக நடித்த போது கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய் வருமானம் வரும். ஆனால், இப்போது எல்லாம் 20 ஆயிரம் ரூபாய்க்கூட வருவது இல்லை. வாடகை கட்டக்கூட காசு இல்லாமல் அவதிப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.