கைவிட்ட ராமராஜன்.. அப்பாவும், அண்ணனும் அப்படி பண்ணீட்டாங்க - நடிகை நளினி வேதனை
நடிகை நளினி தான் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
நடிகை நளினி
தமிழ் சினிமாவில் 80களில் பல முன்னணி நடிகர்களுடன் நாயகியாக வலம் வந்தவர் நடிகை நளினி. பல படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தபோது நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பிறகு திரைத்துறையை விட்டு விலகி இருந்த இவர் மீண்டும் ராமராஜனை பிரிந்த பிறகு நடிக்க தொடங்கி இருக்கிறார். இவருக்கு சின்ன திரையிலும் அதிகமான ரசிகர்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றனர்.
சினிமா வாழ்க்கை
தற்போது, "மோதலும் காதலும்" சீரியலில் கலக்கி வருகிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமண வாழ்க்கை மற்றும் தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கை குறித்தும் மனம் திறந்துள்ளார்.
இவர் சினிமாவிற்கு செல்ல இருப்பதை அறிந்த அவரது அப்பாவும், அண்ணனும் வீட்டை விட்டே சென்றனர். இருந்தாலும் நளினியின் அம்மா நளினிக்கு மிக ஆதரவாக இருந்தார். என்ன ஆனாலும் நளினியை கதாநாயகி ஆக்கிவிட வேண்டும் என அவர் ஆசைப்பட்டதாக தெரிவித்துள்ளார்.