நள்ளிரவில் நடிகையை கடத்தி சென்று திருமணம் செய்த பிரபலம் - அதிர்ச்சி தகவல்

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகையை நள்ளிரவில் அழைத்துச் சென்று பிரபல நடிகர் திருமணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராமராஜன்
தமிழ் சினிமாவில் 80களில் பல முன்னணி நடிகர்களுடன் நாயகியாக வலம் வந்தவர் நடிகை நளினி. அப்போது முன்னணி ஹீரோவாக விளங்கியவர் தான் நடிகர் ராமராஜன். இருவரும் ஒன்றாக பணியாற்றியுள்ளனர்.
அதில் ராமராஜனுக்கு காதல் மலர்ந்துள்ளது. அவர் கூறுவதையெல்லாம் நளினி கேட்டுள்ளார். இதனால் அவரும் காதலிக்கிறார் என எண்ணி ராமராஜன் கடிதத்தின் மூலம் காதலை தெரிவித்துள்ளார். அதனைப் பார்த்து கொஞ்சம் யோசித்துவிட்டு பின்னர் க்ரீன் சிக்னல் காட்டியுள்ளார்.
நள்ளிரவில் திருமணம்
ஆனால், நளினியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், அடித்துள்ளனர். அதன்பின் தான் அவருக்கு அதிகமாக காதல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நள்ளிரவில் நளினி வீட்டிற்கு வந்த ராமராஜன், அவரை அழைத்துக் கொண்டு போய் கோவிலில் திருமணம் செய்துள்ளனர்.
மேலும், தனது குருவான எம்ஜிஆரிடம் ஆசி வாங்கியுள்ளார்.
இதனை நளினியே ஒரு பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.