என்னிடமும்.. கோவை சரளாவிடமும் இதைதான் செய்தார் - வடிவேலு குறித்து ஆர்த்தி பளீச்

Tamil Cinema Vadivelu
By Sumathi May 07, 2024 05:30 PM GMT
Report

வடிவேலு குறித்து ஆர்த்தி பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.

நடிகை ஆர்த்தி

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு. சமீபத்தில் மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.

vadivelu - aarthi

சமீப காலமாக அவருடன் நடித்த சக நடிகர்கள் பலர் அவரை குறித்த நெகடிவ் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ஆர்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில்,

வடிவேலுவுடன் நடிக்கும் போது நம்ம நன்றாக நடிச்சுட்டா அந்த சீன் முடிந்ததும் செல்லம் செமையா இருந்துச்சு. நல்லா பண்ணிட்ட என்று மனதார பாராட்டுவார். ஆனால் அந்த சீன் படத்தில் இருக்கவே செய்யாது.

வடிவேலு பல நடிகைகளை.. இணங்கவில்லையென்றால் துரத்திடுவார் - பகீர் கிளப்பிய பிரபலம்!

வடிவேலு பல நடிகைகளை.. இணங்கவில்லையென்றால் துரத்திடுவார் - பகீர் கிளப்பிய பிரபலம்!

வடிவேலு குணம்

காரணம் தன்னைவிட நன்றாக ஒரு காமெடி நடிகர் நடித்து விட்டால் அந்த படத்தில் அந்த சீனே இல்லாமல் செய்து விடுவது தான் வடிவேலுவின் கேரக்டர். 24 ஆம் புலிகேசி படத்திற்காக கோவை சரளாவையும், என்னையும் தான் முதலில் முடிவு செய்து வைத்திருந்தார்கள்.

என்னிடமும்.. கோவை சரளாவிடமும் இதைதான் செய்தார் - வடிவேலு குறித்து ஆர்த்தி பளீச் | Comedy Actress Aarthi About Vadivelu Behaviour

ஆனால் வடிவேலு அவர்களெல்லாம் பார்த்த மூஞ்சிகள் என்று சொன்னதாலேயே விலக்கி விட்டார்கள். பாம்புனா கொத்த தான் செய்யும் அதை மாற்ற முடியாது. அதனால நம்ம பாட்டுக்கு போயிட்டே இருக்கணும் எனத் தெரிவித்துள்ளார்.