பிரபல காமெடி நடிகர் அரசியலுக்கு வர முடிவு - அதிரடி அறிவிப்பு!
சென்னையில் பிரபல காமெடி நடிகர் கூடிய விரைவில் அரசியலுக்குள் வரப்போவதாக பேட்டி ஒன்றில் அறிவிப்பு விடுத்துள்ளார்.
காமெடி நடிகர்
தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை திறமையினால் ரசிகர்களை ஈர்த்து பிரபலமாகிய காமெடி நடிகர் தாடி பாலாஜி.

இவர் சென்னை அயனாவரம் சயானி பேருந்து நிறுத்தம் அருகே பரோ உபகார அறக்கட்டளையின் சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
அந்த அறக்கட்டளையின் நிறுவனர் வசந்த்குமார் செயலாளர் கார்த்திக் மற்றும் V4 ஈவன்ட்ஸ் நிறுவனர் வந்தித் ஆகியோர் முன்னிலையில் சினிமா நடிகர் மற்றும் சின்னத்திரை புகழ் தாடி பாலாஜி கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து மோர் மற்றும் தர்பூசணி வெள்ளரிக்காய் ஆகியவற்றை வழங்கினார்.
பேட்டி
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து இவர் பேசுகையில், "நான் கட்டாயமாக கூடிய விரைவில் அரசியலுக்கு வருவேன்.

எனக்கு அங்கீகாரம் கொடுக்கும் கட்சிகளோடு இணைந்து பணி ஆற்றுவேன், அதே கட்சியில் புதுமையான முறையில் தனித்துவமாக செயல்படுவேன்" என்று தெரிவித்தார்.
மேலும், அவர் "போதைப் பொருட்களை பொருத்தவரையில் அதனை உபயோகிப்பவர்கள் நினைத்தால் மட்டுமே முற்றிலும் தடுக்க முடியும்.
மாணவர்களுக்கு பன்னிரண்டாவது முடித்த மாணவ மாணவியரை அடுத்த கட்டமாக கல்லூரிக்கு அனுப்புவதற்காக பெற்றோர்கள் கடும் வெயிலிலும் ஒவ்வொரு கல்லூரிகளாக அலைந்து வருவதை மாணவர்கள் கருத்தில் கொண்டு நன்கு படித்து வெற்றி பெற வேண்டும்" என்றும் கூறினார்.
இதில் இவர் அரசியலுக்கு வருவதாக கூறியது தற்போது வைரலாகி வருகிறது.
விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம்: சரத் பொன்சேகா வாக்குமூலம் IBC Tamil
துமிந்த திசாநாயக்கவுக்கு எதிரான தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி வழக்கு : ஜனவரியில் விசாரணை IBC Tamil