பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியில் களமிறங்கும் stand up காமெடியன் - யார் தெரியுமா?
வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து களமிறங்குவதாக காமெடியன் ஷியாம் ரங்கீலா அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வாக்குசேகரிப்பில் பிரதமர் மோடி தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.அந்த வகையில், மோடி வார இறுதியில் மனதின் குரல்’ என்ற பெயரில் வானொலி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
இந்த நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல இதற்கான எதிர்மறை விமர்சனங்களுக்கும் எவ்வித பஞ்சமும் இல்லை. அப்படி தான் ஷியாம் ரங்கீலா என்பவர் மனதின் குரல் நிகழ்ச்சியை தொடர்ந்து மிமிக்ரி செய்து கலாய்த்து வந்தார். அந்த வீடியோ படு வைரலானது.
காமெடியன்
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் மோடி வாராணசியில் போட்டியிடுகிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில், ”நாட்டில் அரசியல் மிகப்பெரிய நகைச்சுவையாக மாறிவிட்டது. எனவே நானும் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளேன்.
பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து நான் போட்டியிட இருக்கிறேன். இது ஒரு ஜனநாயக வழிமுறை. யார் வேண்டுமானாலும் யாரை எதிர்த்து வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். மக்களின் பேராதரவோடு நான் வெற்றி பெறுவேன்” என்று கூறியுள்ளார்.
மேலும்,நான் போட்டியிடுவதால் வாராணசி தொகுதி மக்களுக்கு மாற்று வாய்ப்பு கிடைக்கும். சூரத், இந்தூர் தொகுதிகளை போல் மாற்று வாய்ப்பு இல்லாமல் போகாது. எனவே வரும் வாரத்தில் என்னுடைய வேட்பு மனுவை பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாராணசி தொகுதியில் நான் தாக்கல் செய்ய உள்ளேன். முடிவு எதுவாக இருந்தாலும் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை இவ்வாறு தெரிவித்தார்