காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி : பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்

BJP Narendra Modi
By Irumporai Nov 19, 2022 02:11 AM GMT
Report

உத்தரபிரதேசத்தின் காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே நீண்டகால பாரம்பரிய, கலாசார தொடர்பு உள்ளது.

இதை புதுப்பிக்கும் நோக்கில் வாரணாசியில் ஒரு மாத காலத்துக்கு காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது 

காசி தமிழ் சங்கமம்

மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியை, கலாசாரம், ஜவுளி, ரெயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல்-ஒளிபரப்பு உள்ளிட்ட அமைச்சகங்களும், உத்தரபிரதேச அரசும் இணைந்து நடத்துகின்றன.

பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார் 

இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று  தொடங்கிவைக்கிறார். அத்துடன் தமிழகத்தில் இருந்து வாரணாசி சென்றுள்ள உயர்மட்டக்குழுவினருடன் அவர் கலந்துரையாடல் நடத்துகிறார்.

காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி : பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார் | Khasi Tamil Sangam Program Modi

காசி, தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் இசைஞானி இளையராஜாவின் இசை மற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

வாரணாசியில் ஒரு மாதம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இரு மாநிலங்களின் கைத்தறி, கைவினைப்பொருள், புத்தக, ஆவணப்படம், சமையல் தொடர்பான பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.