தன் நாட்டு ராணுவத்தை கிண்டல் செய்த ஸ்டான்ட்அப் காமெடியன் - அளிக்கப்பட்ட கடும் தண்டனை!

China
By Vinothini May 19, 2023 07:02 PM GMT
Vinothini

Vinothini

in சீனா
Report

தனது நாட்டின் ராணுவம் குறித்து மேடையில் கிண்டலாக பேசிய ஸ்டான்ட்அப் காமெடியனுக்கு கடுமையான தண்டனை வழக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்ட்அப் காமெடியன்

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள ஷாங்காய் சியாகுவோ என்ற நிறுவனம் கடந்த சனிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

comedian-li-haoshi-makes-joke-about-the-army

அதில், ஸ்டாண்டப் காமெடியரான லி ஹாயோஷி-யின் நிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்தது.

அதில் இவர் தன்னுடைய நாய்களின் நடத்தையை, ராணுவத்துடன் ஒப்பிட்டு நகைச்சுவையாகப் பேசினார்.

அவர் பேசியது, சீன ராணுவத்துடன் தொடர்புடைய, அதிபர் ஜி ஜின்பிங் சொன்ன முழக்கத்தின் ஒரு பகுதி எனக் கூறப்படுகிறது. மேலும், அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

தண்டனை

இந்நிலையில், அந்த நாட்டின் அரசாங்கம், அந்த காமெடியனுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டது.

இதற்கிடையே அவர், "என்னுடைய நோக்கம் அரசை அவமானப்படுத்துவதல்ல, நகைச்சுவையாக மட்டுமே பேசினேன். என்னுடைய பேச்சுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

comedian-li-haoshi-makes-joke-about-the-army

ஆனாலும், அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது, பின்னர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஷாங்காய் சியாகுவோ நிறுவனத்துக்கு 2 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து, அந்த காமெடியன் கைதுசெய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும், சீனாவின் கலாசார அமைச்சகத்தின் பெய்ஜிங் பிரிவு, "ராணுவத்துடன் தொடர்புடைய புகழ்பெற்ற முழக்கத்தை அவதூறாகப் பேசுவதற்கு எந்தவொரு நிறுவனமும் அல்லது தனிநபரும் சீன ராணுவத்தை ஒரு மேடைக்காகப் பயன்படுத்துவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்று தெரிவித்திருக்கிறது.