புற்றுநோய் இருப்பதை மறைத்த பாஸ்கி - கண்டுபிடித்த மனைவியின் செயல்!
தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டது குறித்து நடிகர் பாஸ்கி மனம் திறந்துள்ளார்.
நடிகர் பாஸ்கி
ஜெயாடிவியில் ஹரிகிரிஅசெம்பிளி என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாஸ்கி. கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “என் மனைவிக்குப் புற்றுநோய் இருந்தது யாருக்குமே தெரியாது. வீட்டில் யாரிடமும் சொல்லவே இல்லை.
மனைவி இறப்பு
தேவையில்லாமல் அதைச் சொல்லி அவளது சந்தோஷத்தை ஏன் சிதைக்கவேண்டும் என அமைதியாக இருந்தேன். ஒருநாள் திடீரென்று, 'உடம்புக்கு என்ன பிரச்சினை? முடி எல்லாம் கொட்ட ஆரம்பிக்கிறது? என்ன மறைக்கிறீர்களா? எனக்கு கேன்சரா?’ என்று நேடியாகக் கேட்க ஆரம்பித்துவிட்டாள் என் மனைவி.
கார்டூனிஸ்ட் மதன் தங்கை வசந்தியைதான் நான் கல்யாணம் செய்தேன். 30 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம். கடைசியில் 2 ஆண்டுகள் முன்பாக அவள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டாள் என வேதனை தெரிவித்துள்ளார்.