அந்த ஹீரோக்களுக்கு நான் அப்படி இருக்கேனா..? ஆங்கரிடம் சீறிய நடிகை சினேகா!

Sneha Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jan 18, 2024 03:30 PM GMT
Report

தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு நடிகை சினேகா கோபமாக பதிலளித்துள்ளார்.

நடிகை சினேகா

'என்னவளே' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சினேகா. தொடர்ந்து ஆனந்தம், பம்மல் கே. சம்பந்தம், உன்னை நினைத்து, வசீகரா, ஜனா, ஆயுதம், புதுப்பேட்டை, பாண்டி, உன் சமையல் அறையில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அந்த ஹீரோக்களுக்கு நான் அப்படி இருக்கேனா..? ஆங்கரிடம் சீறிய நடிகை சினேகா! | Actress Sneha Angry On Interview

மேலும், விஜய், அஜித், கமல், தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார்.

நடிகர் பாஸ்கி தொகுப்பாளராக இருந்த நேர்காணல் ஒன்றில் சினேகா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் "இப்போதுள்ள ஹீரோக்களுக்கு அக்கா மாதிரி இருக்கீங்க. உதாரணமா சொன்னா ஆர்யா, தனுஷ்.

பேட்டி 

இதனால ஏதாவது பிரச்சனையா..? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கடுப்பான சினேகா "நீங்க அப்படி சொல்ல முடியாது. நான் பக்கத்துல இருக்கும்போது இப்படி சொல்லலாமா..?

அந்த ஹீரோக்களுக்கு நான் அப்படி இருக்கேனா..? ஆங்கரிடம் சீறிய நடிகை சினேகா! | Actress Sneha Angry On Interview

அதுவும் இவ்ளோ எடை குறைச்சுருக்கேன். நான் இத்தன ஹீரோஸ் கூட நடிச்சுருக்கேன். பிரசன்னா கூட நடிச்சுருக்கேன், நரேன் கூட நடிச்சிருக்கேன், ஷாம் கூட நடிச்சுருக்கேன். ஷாம் கூட என்னை அக்கா, இல்லன்னா தங்கச்சின்னு சொல்ல முடியுமா..?

தனுஷோட ஒரு இன்டெர்வியூல ரசிகர்களே அவர்கிட்ட சொல்றாங்க. உங்களுக்கு சினேகா கூட ஜோடி நல்லாருக்குன்னு. எப்படி நீங்க அப்படி சொல்ல முடியும்..? என்று சினேகா கொந்தளித்து பேசியுள்ளார்.