பாராளுமன்றத்தில் நடந்த காரசார விவாதம் .. திடீரென புகைப்பிடித்த பெண் MP-பகீர் சம்பவம்!
பாராளுமன்றத்தில் பெண் எம்.பி புகைப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொலம்பியா
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் வசித்து வருபவர் கேத்தி ஜூவினோ. இவர் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று கிரீன் கட்சியில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தலைநகர் பகோடாவில் உள்ள அந்த நாட்டின் பாராளுமன்ற அவையில் பொதுச் சுகாதாரம் தொடர்பான மசோதாவுக்கான விவாதம் நடைபெற்றது.இதில் கிரீன் கட்சியின் சார்பில் கேத்தி ஜூவினோ விவாதத்தில் கலந்து கொண்டார்.
பெண் எம்.பி
அப்போது கேத்தி ஜூவினோ தான் கைகளில் மறைத்து வைத்திருந்த இ-சிகரெட்டை கொண்டு புகை பிடித்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டு வேகமாக பரவி சர்ச்சை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கேத்தி ஜூவினோ தனது செயலுக்கு நாட்டு மக்களிடமும், சபாநாயகரிடமும் சபாநாயகரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.