குடும்ப உறுப்பினர்களுக்கு தாய்ப்பால் விருந்து.. சர்ச்சையில் சிக்கிய யூடியூபர்- பகீர் பின்னணி!
இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்திற்குத் தாய்ப் பால் விருந்தளித்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தாய்ப் பால்
9 மாத காலங்கள் கருவில் சுமந்து மகிழ்ச்சியாய் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு, தாய் முதலில் கொடுக்கும் தாய்ப்பால் தான் அமிர்தம். குறைந்தபட்சம் 6 மாதம் வரை, தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
இதனால் முழு ஊட்டச்சத்தையும் கிடைக்கும் என்பதால் பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை, பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடாதீர்கள் என்பார்கள்.இதற்காகக் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கு அடுத்தபடியாக இளம்பெண்கள் பலரும் தாய்ப்பால் தானம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்திற்குத் தாய்ப் பால் விருந்தளித்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விருந்து
அந்த வீடியோவில் சாரா ஸ்டீவன்சன் என்ற யூடியூபர் சமீபத்தில் குழந்தை பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இதனைக் கொண்டாடும் விதமாகத் தனது குடும்ப உறுப்பினர்களுடன் படகு சவாரி சென்றுள்ளார்.
அப்போது தனது தாய்ப் பாலை பம்ப் செய்து ஒரு கிளாசில் குடும்ப உறுப்பினர்களுக்கு விருந்து அளித்துள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளது.இந்த வீடியோ வைரலான நிலையில் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியது.