இனி அமைதி இல்லை; இஸ்ரேலுடன் உறவு முறிவு - கொதித்தெழுந்த கொலம்பியா!

Israel Colombia Gaza
By Sumathi May 02, 2024 06:15 AM GMT
Report

இஸ்ரேல் நாட்டின் உறவை முறித்துக்கொள்வதாக கொலம்பியா அறிவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதல்

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

colombia

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் தற்போது தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு உலக நாடுகள் கண்டித்தும் இஸ்ரேல் செவி சாய்ப்பதாய் தெரியவில்லை.

95 வருஷமா.. ஒரு குழந்தை கூட பிறக்கல; அப்படி ஒரு நாடு இருக்கு தெரியுமா?

95 வருஷமா.. ஒரு குழந்தை கூட பிறக்கல; அப்படி ஒரு நாடு இருக்கு தெரியுமா?

கொலம்பியா அதிரடி

அதன் வரிசையில், காசா மீது இஸ்ரேல் நடத்தும் போரை கொலம்பியா கடுமையாக சாடி வந்தது. இந்நிலையில், பொகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் தின விழாவில் பேசிய கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசுடனான உறவை முறித்துக் கொள்கிறோம்.

israel - gaza

காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது. அனைத்து நாடுகளும் தீவிர நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றுத் தெரிவித்துள்ளார்.