ஓடும் பேருந்தில் ஒரே ஒரு கேள்வி தான் - ஓட்டுநரின் கன்னத்தில் பளார் விட்ட கல்லூரி மாணவி!
அரசு பேருந்தில் ஓட்டுநரும், கல்லூரி மாணவியும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவி
சென்னை தி.நகரில் இருந்து திருவேற்காடு நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் நெற்குன்றத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் பயணம் செய்தார். அந்த மாணவி நெற்குன்றம் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வந்தபோதும், இருக்கையிலிருந்து எழுந்து வராமல் இருந்ததாக தெரிகிறது.
இதனால் அந்த பேருந்தின் நடத்துநர் "பேருந்தை நிறுத்தினால்தான் எழுந்து வருவாயா? என்று மாணவியிடம் கேட்டுள்ளார். உடனே மாணவி, பேருந்தின் முன்புற படிக்கட்டு வழியாக இறங்க சென்றார். இதனை கவனித்த ஓட்டுநரும் அந்த மாணவியிடம் "நிறுத்தம் வருவதற்குள் எழுந்து வரவேண்டியது தானே? என கேட்டுள்ளார்.
வழக்குப்பதிவு
இதனால் அந்த மாணவிக்கும், ஓட்டுநருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகக்கட்டதில் ஆத்திரமடைந்த மனைவி ஓட்டுநரின் கன்னத்தில் அறைந்ததாகவும், பதிலுக்கு ஓட்டுநரும் மாணவியின் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. ஓடும் பேருந்தில் இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் மற்ற பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனைடுத்து சிறிது தூரம் தள்ளிச்சென்று மாணவியை இறக்கிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.