அப்பா.. ரத்தமா போகுதுப்பா.. உடல் எடை குறைக்க நாட்டு மருந்து சாப்பிட்ட பெண்!
உடல் எடையை குறைக்க வெங்காரம் சாப்பிட்டு கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடல் எடை
மதுரை, மீனாம்பாள்புரம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (51) - விஜயலெட்சுமி தம்பதி. இவர்கள் மகன், மகள் என இரு பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர்.

இளைய மகளான கலையரசி தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்துள்ளார். இவர் சிறிதளவு உடல்பருமனாக இருந்துள்ளார். எனவே அவ்வப்போது தனது பெற்றோரிடம் உடல் பருமனை குறைக்க வேண்டும் என கூறிவந்துள்ளார்.
இந்நிலையில் இணைவோம் இயற்கையுடன் என்ற YOUTUBE பக்கத்தில் உடல் எடை குறையாதவர்களுக்கு Fat கரைய வைத்து உடலை மெலிவிக்கும் வெங்காரம் என்ற தலைப்பில் பதிவிட்டிருந்த வீடியோ பதிவை பார்த்துள்ளார்.
மாணவி பலி
இதனையடுத்து நாட்டு மருந்து கடையில் வெங்காரம் என்ற நாட்டு மருந்து பொருளை வீட்டிற்கு வாங்கிவந்து சாப்பிட்டதில் வாந்தி வயிற்றுபோக்கும் ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
இருப்பினும் அதிகமாக வயிறுவலிப்பதாகவும் வயிற்றுபோக்கில் ரத்தம் வெளியேறி வருவதாகவும் கூறி தனது தந்தையை கட்டிபிடித்து அழுதுள்ளார். இதனால் மருத்துவமனைக்கு கலையரசியை அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கலையரசி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறி உள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.