பலத்த மழையில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்.. திடீரென மின்னல் தாக்கி உயிரிழந்த சோகம்!
மின்னல் தாக்கியதால் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவர்
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வினய் குமார் 21 வயதான இவர், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது, அப்பொழுது வினய்குமார் தனது மோட்டார் சைக்கிளில், தன்னுடன் படிக்கும் ரேவனு, திவ்யதேஜாவு ஆகியோருடன் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பாப்பான் சத்திரத்தில் தாங்கள் தங்கி இருக்கும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
லாரி மீது நேருக்கு நேர் மோதி நசுங்கிய கார்.. குழந்தை உட்பட 7 பேர் பலி - முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!
மின்னல் அட்டாக்
இந்நிலையில், பைக்கில் அவர்கள் கல்லூரி அருகிலே உள்ள பெங்களூரு - சென்னை தேசிய சாலையில் சென்றபோது திடீரென வினய்குமார் மீது மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அதில் பரிதாபமாக உயிரிழந்தார், அவரது நண்பர்கள் இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். மேலும், இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.