ப்ளே பாய் மாணவன்; தனியாக வீடு எடுத்து அத்துமீறல் - 2 பெண்களின் அந்தரங்க வீடியோ!
மாணவிகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டார்.
அத்துமீறல்
நாகர்கோவில் மாவட்டம் வாத்தியார்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர்ஷன் (22). இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.ஏ ஆங்கிலம் படித்து வருகிறார். இவருக்கு இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. அப்போது ஸ்ரீதர்ஷன், அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் அவரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்திருகிறார். இதனிடையே, ஸ்ரீதர்ஷனின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
2 பெண்கள்
இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர்ஷன், அந்தப் பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்ததோடு அந்த பெண்ணின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை காட்டி மிரட்டியுள்ளார்.
இதே போல மற்றொரு இளம் பெண்ணிடமும் ஸ்ரீதர்ஷன் காதலிப்பதாகக் கூறி பழகியதோடு அந்தப் பெண்ணின் புகைப்படங்களையும் வெளியிட்டு விடுவதாக மிரட்டி தகராறு செய்துள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த இரண்டு கல்லூரி மாணவிகளும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் கல்லூரி மாணவர் ஸ்ரீதர்ஷனை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.