இன்ஸ்டா பழக்கம்; 6 மாதம்..4 பேர்..மாணவிக்கு விடாமல் நடந்த கொடூரம் - ஷாக் பின்னணி!

Sexual harassment India Maharashtra Crime
By Swetha Sep 27, 2024 03:30 PM GMT
Report

மாணவியை 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் வெளிசத்திற்கு வந்துள்ளது.

இன்ஸ்டா பழக்கம்

மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த 18 வயது நிரம்பாத மாணவி ஒருவர் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர், சமூக வலைத்தளத்தில் 4 ஆண் நண்பர்களுடன் பேசி பழகி வந்துள்ளார். இதில் இருவர் சிறுவர்கள் ஆவர்.

இன்ஸ்டா பழக்கம்; 6 மாதம்..4 பேர்..மாணவிக்கு விடாமல் நடந்த கொடூரம் - ஷாக் பின்னணி! | College Girls Got Raped By 4 Boys Within 6 Months

இந்த நான்கு பேரும் ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் அறிய மாட்டார்கள். மேலும், சமூக வலைதளம் மூலமாக சிறுமியுடன் பழகி வந்தனர். அப்போது சிறுமியிடம் நைசாக பேசி குறிப்பிட்ட பகுதிக்கு அழைத்து 4 பேரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல் - காதலனுக்காக மனைவி செய்த கொடூர செயல்

இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல் - காதலனுக்காக மனைவி செய்த கொடூர செயல்

கொடூரம்..

ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இடையில் வெவ்வேறு இடங்களில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், கல்லூரியில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான கூட்டத்தின் போது இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது.

இன்ஸ்டா பழக்கம்; 6 மாதம்..4 பேர்..மாணவிக்கு விடாமல் நடந்த கொடூரம் - ஷாக் பின்னணி! | College Girls Got Raped By 4 Boys Within 6 Months

கருத்தரங்கின்போது தனக்கு நேர்ந்த கொடுமையை பாதிக்கப்பட்ட சிறுமி கூறினார். மேலும் அவர்கள் வீடியோவும் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, "குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீது நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம்.

அவர்களில் இருவர் மைனர்கள், அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மற்ற இருவர் 20 முதல் 22 வயதுடைய இளைஞர்கள். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறினர்.