பஸ்டாண்டில் மாணவியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
மறுத்த மாணவி
சேலம், மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பழைய பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
சில நிமிடங்களில் அந்த இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார். அடுத்த நிமிடமே அதே கத்தியால் தமது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இளைஞர் வெறிச்செயல்
உடனே அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், விசாரணையில் கத்தியால் குத்தியவர் பெயர் மோகனபிரியன். ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர்.
அந்த பெண், கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி. இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் பழகியுள்ளனர்.
ஒருவரை ஒருவர் பார்க்காமல் காதலித்து வந்த நிலையில், தன்னுடன் ஒரு வயது குறைவு என்பதால் இளைஞரின் காதலை கல்லூரி மாணவி ஏற்காமல் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

வெளியானது உலகின் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் பட்டியல்..! அனைத்திலும் முன்னிற்கும் ட்ரம்ப் IBC Tamil

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
