அண்ணனுக்காக காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற 2 சகோதரிகள் - ஒருவர் உயிரிழப்பு
அண்ணனுக்காக காவல்நிலையம் முன்பு விஷம் அருந்திய சகோதரி உயிரிழந்துள்ளார்.
அண்ணன் பாசம்
தஞ்சாவூர், நடுகாவேரி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (32). இவரது தந்தை அய்யாவுவை அதே பகுதியைச் சேர்ந்த சிலர், சாராயம் விற்பனை செய்ய வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் அந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பான விசாரணைக்காக காவலர்கள் தினேஷை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது தினேஷின் சகோதரி மேனகா தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதால், அவரை அழைத்துச் செல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
சகோதரி உயிரிழப்பு
ஆனால், அதனை மறுத்து காவல் ஆய்வாளர் சர்மிளா தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மேனகா தனது சகோதரி கீர்த்திகாவுடன் சேர்ந்து காவல்நிலையம் சென்று அங்கே விஷம் குடித்துள்ளனர். உடனே, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதில் சிகிச்சை பலனின்றி கீர்த்திகா உயிரிழந்தார், மேனகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்மிளா மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, மேனகாவின் குடும்பத்தினர் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தினேஷ் மீது 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
2024ம் ஆண்டில் மட்டும் அவர் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது சகோதரிகள் காவல்நிலையத்தில் விஷம் குடிக்கவில்லை என தஞ்சாவூர் எஸ்.பி. இராஜராம் தெரிவித்துள்ளார்.