பாதுகாப்பு காரணம் - கோவையில் பிரதமரின் Road Show'விற்கு அனுமதி மறுப்பு

Coimbatore BJP Narendra Modi
By Karthick Mar 15, 2024 09:36 AM GMT
Report

தமிழக வந்துள்ள பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அடுத்தடுத்த விசிட்

மக்களவை தேர்தல் நெருங்கு வரும் சூழலில், கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மாநில, தேசிய கட்சிகள் என மும்முரமாக செயல்பட்டு வருகின்றார்.

coimbatore-pm-modi-rally-permission-denied

நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, செல்லும் இடமேல்லாம் ரோடு ஷோ நடத்தி வருகின்றார். தமிழகம் வந்துள்ள அவர், இன்று கன்னியாகுமரியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

coimbatore-pm-modi-rally-permission-denied

மாநில தலைவர் அண்ணாமலை, அண்மையில் கட்சியில் இணைந்த சரத்குமார், கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

திமுக - காங்கிரஸ் செய்த பாவங்கள் - அவர்கள் பலனை அனுபவிப்பார்கள் - பிரதமர் மோடி

திமுக - காங்கிரஸ் செய்த பாவங்கள் - அவர்கள் பலனை அனுபவிப்பார்கள் - பிரதமர் மோடி

பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாவங்களை செய்துள்ள திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் படம் புகட்டுவார்கள் என பேசினார். கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தை முடித்த நிலையில்,  வரும் 18-ஆம் தேதி கோவை மாவட்டத்தில் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள இருக்கிறார்.

அனுமதி மறுப்பு

கோவை மாவட்டத்தில், பிரதமர் வருகையை அடுத்து ரோடு ஷோ ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இதற்கு தற்போது மாநகர காவல்துறை அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

coimbatore-pm-modi-rally-permission-denied

பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி, மாநகர காவல் அனுமதிக்கயளிக்க மறுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இது தொடர்பாக சிறப்பு பாதுகாப்பு அமைப்பினருடன் மாநகர காவல் துறையினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.      

பாதுகாப்பு காரணம் - கோவையில் பிரதமரின் Road Show