திமுகவில் சலசலப்பு; கோவை மாநகராட்சி மேயர் கல்பனா திடீர் ராஜினாமா...என்ன காரணம்?
கோயம்புத்தூர் மாநகராட்சி திமுக மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்துள்ளார்.
மேயர் கல்பனா
கோவை மாநகராட்சியின் 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார். கோவையின் முதல் பெண் மேயராக திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டார். கல்பனா கோவை மேயராக பதவியேற்ற நாள் முதலே பல்வேறு சலசலப்புகள் கட்சியினர் மத்தியில் நிலவியது.
அதற்கு இவரது கணவர் ஆனந்தகுமாரின் அரசியல் தலையீடு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் திமுக கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை.இந்த சூழலில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்,
திடீர் ராஜினாமா
கல்பனாவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து திமுகவுக்கு குறைவான வாக்குகளே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.அதேபோல டெண்டர் ஒதுக்கீடு உட்பட நிர்வாக ரீதியாகவும், மேயர் கல்பனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த குற்றசாட்டுகள் குறித்து திமுக தலைமை அழைத்து விசாரித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை அவரது உதவியாளர் மூலமாக ஆணையரிடம் வழங்கியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு தெரிவித்துள்ளார்.