மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்....கவுன்சிலர்கள் 40 பேர் உதயநிதிக்கு கடிதம்

Udhayanidhi Stalin DMK Tirunelveli
By Karthick Aug 18, 2023 01:17 PM GMT
Report

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் நிர்வாகத்திறனற்றவர் என கூறி மாநகராட்சி கவுன்சிலர்கள் 40 பேர் அமைச்சர் உதயநிதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கவுன்சிலர்கள் போர்க்கொடி  

no-confidence-on-nellai-mayor

நெல்லையில் திமுக மேயர் சரவணனை அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே புறக்கணித்து வரும் சம்பவம் சில காலமாகவே நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,

கடந்த ஜூலை 27-ஆம் தேதி நிதி மதிப்பீடு குழு அமைப்பது தொடர்பாக நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், திமுக கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அதே போல, சுதந்திர விழாவில், மேயர் சரவணன் பேச துவங்கியவுடனே மாமன்ற உறுப்பினர்கள் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. மேயர் சரவணன் மீது அதிருப்தியில் இருந்து வரும் உறுப்பினர்கள் 40 பேர் அமைச்சர் உதயநிதிக்கு அவரை மாற்றும் படி கடிதம் எழுதியுள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தமுள்ள 55 உறுப்பினர்களில் 40 பேர் மேயரை மாற்றவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது திமுக தலைமைக்கு நெருக்கடியை உருவாகியுள்ளது.