மனைவிக்கு 2 லட்சம் ஜீவனாம்சம் - 20 மூட்டைகளில் நாணயங்களை கொண்டு வந்த கணவர்

Tamil nadu Coimbatore Money Divorce
By Karthikraja Dec 19, 2024 08:00 AM GMT
Report

ஜீவனாம்சம் வழங்குவதற்காக 20 மூட்டைகளில் நாணயங்களை கொண்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.2 லட்சம்

கோவையை சேர்ந்த தம்பதிகள் விவாகரத்து கோரி மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். 

coimbatore court

வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையின் முடிவில் மனைவிக்கு ரூ.2 லட்சம் ஜீவனாம்சம் வழங்ககோரி தீர்ப்பளித்தனர். 

71 லட்சத்தை கையால் எண்ண வைத்து பழி வாங்கிய வாடிக்கையாளர் - அப்படி என்ன கோபம்?

71 லட்சத்தை கையால் எண்ண வைத்து பழி வாங்கிய வாடிக்கையாளர் - அப்படி என்ன கோபம்?

நாணய மூட்டை

உடனடியாக ஜீவனாம்சம் வழங்குவதற்காக தனது காருக்கு சென்ற நபர் 20 மூட்டைகளை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு வந்தார். அந்த மூட்டைகளில் 80,000 ரூபாய்க்கு 1ரூபாய், 2ரூபாய், 5ரூபாய், நாணயங்களாக இருந்தது. 

coimbatore court husbandf coins

இதை கண்டு நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அவர் மனைவி அதிர்ச்சியடைந்தனர். இப்படி நாணயங்களை மூட்டையில் வழங்குவதை ஏற்க முடியாது. ரூபாய் நோட்டாக மாற்றி ஜீவனாம்சம் வழங்குங்கள் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

இதனையடுத்து அந்த நபர் நாணய மூட்டைகளை காரில் ஏற்றி புறப்பட்டு சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.