வளர்ப்பு நாயால் கதறிய பெண் வீட்டார் குடும்பம் - திருமண வீட்டை புரட்டி போட்ட சம்பவம்!’
இறந்த செல்ல பிராணியின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறிய காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாய் இறப்பு
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரத். தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகின்றார். இவருடையா பெற்றோர் இருவரும் கூலித் தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இவருடைய தங்கை சுருதிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. அதன்படி ஜென்னி ரெசிடென்சியில் அதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
உருக்கமான வீடியோ
இதற்கிடையில் இவர்கள் சஞ்சு என்ற நாயை கடந்த 11 ஆண்டுகளாக வளர்த்து வந்துள்ளனர். திருமண நிகழ்ச்சி என்பதால் நாயை விலங்குகள் நல மருத்துவமனையில் ஒரு நாள் வைத்து பராமரிக்க கொடுத்துள்ளனர். அந்த நாயை மருத்துவர்கள் சுரேந்தர் மற்றும் கோபிகா ஆகிய இருவரும் கவனித்துக் கொள்வதாக கூறி அனுப்பியுள்ளனர்.
கோவையில், விலங்குகள் நல மருத்துவமனையில் பராமரிப்புக்காக விடப்பட்ட நாய் உயிரிழந்தது. இதனால் நாயை வளர்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.#coimbatore #dogissue pic.twitter.com/CtjCW7uPDk
— Indian Express Tamil (@IeTamil) November 25, 2024
தொடர்ந்து சரத்திற்கு தொலைபேசி வாயிலாக நாய்க்கு உடல்நலம் சரியில்லை எனவே உடனடியாக வருமாறு அழைப்பு வந்துள்ளது. உடனே, தாய், தந்தையுடன் சரத் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருடைய நாய் இறந்து கிடந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் நிர்வாகத்திடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நிலையில், பதில் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. தற்போது சரத் குடும்பத்தினர் தங்களின் வளர்ப்பு நாயை பார்த்து கதறி அழும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.