கோவையில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சிலிண்டர் சப்லையர்
கோவை தெற்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மக்களோடு மக்களாக பணியாற்றும் சிலின்டர் எரிவாயு சப்ளை செய்யும் நபர் வேட்புமனு தாக்கல் செய்தார். கோவை மாநகரத்தின் மைய பகுதியாக உள்ள காந்திபுரம், 51 வது வார்டு, பகுதியில் சிலிண்டர் எரிவாயு சப்ளை செய்பவர், தண்டபாணி, சமூக ஆர்வலரான இவர் சிலிண்டர் சப்ளை செய்ய செல்லும் பகுதிகளில் தினம் தோறும் நடைபெறும், பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகான உடனுக்குடன் அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக காந்திபுரம் பகுதியில் நிவர்த்தி செய்து தந்துள்ளதாகவும்.
மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு சமூக பணிகளை மக்களுக்காக முன்னின்று செய்து கொடுத்ததாகவும் தன்னிடம் மக்களுக்கு சேவை செய்ய போதிய தொகை மட்டும் தான் இல்லை ஆனால் சேவை மணப்பான்மை அளவுக்கு அதிகமாக உள்ளது.
இதனால் இந்த பகுதியில் மக்களின் தேவைகளுக்காக போராடும் ஒரு முதல் குடிமகனாக தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து மக்களிடம் வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் மக்கள் எனக்கு வாக்களித்து, தன்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய நான் பாடு படுவேன் என்ற கொள்கையை முன்னிருத்தி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக பந்தய சாலை பகுதியில் உள்ள மத்திய மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சிவ சுப்பிரமணியத்திடம் தனது விருப்ப மனுவை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.