நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு - பகீர் சம்பவம்

Coimbatore Attempted Murder Crime
By Sumathi Mar 23, 2023 06:48 AM GMT
Report

நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த பெண் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆசிட் வீசி

கோயம்புத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், முதல் குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் நின்றுகொண்டு இருந்தார். அப்போது, அங்கு இருந்த மர்ம நபர், பெண்ணின் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு - பகீர் சம்பவம் | Coimbatore Court Acid Attack

இதனை தடுக்க முயன்ற வழக்கறிஞர் ஒருவர் மீதும் ஆசி பட்டு காயமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த வழக்கறிஞர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பரபரப்பு

தொடர்ந்து, மர்ம நபரை பிடித்து அடித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதனையடுத்து அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நீதிமன்றத்தில் தகுந்த பாதுகாப்பு வழங்க கோரி வழக்கறிஞர்கள் தொடர்ந்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் கவிதா, அவரது கணவர் குடும்ப பிரச்சனையில் அவர் மீது ஆசிட் வீசப்பட்டு இருக்காம் என தெரியவருகிறது.