3 ஆண்டுகள் நெருக்கம் - திருமனத்திற்கு மறுத்த பெண்...ஆசிட் வீசி வாலிபர் வெறிச்செயல்!
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அந்தப் பெண்ணை திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தி வந்ததால் அதற்கு மறுத்து வந்த அந்தப் பெண் மீது வாலிபர் ஆசிட் வீசி இருக்கிறார்.
திருமணமாகி 3 குழந்தைகள்
கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் வாசனை பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் அகமது.
அந்த வாலிபர் பணிபுரிந்து வந்த அதே நிறுவனத்தில் 32 வயதான பெண் ஒருவரும் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
ஆசிட் வீசி வெறிச் செயல்
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்று அந்தப் பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார் . அந்தப் பெண்ணுக்கும் அகமதுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பழக்கம் இருந்து வந்திருக்கிறது.
அந்த பழக்கத்தில் அந்த பெண்ணை எப்படியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பி இருக்கிறார் அகமது. கணவருடன் விவாகரத்து பெற்று விட்டதால் எப்படியும் வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
அது ஏன் என்னை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கேட்டிருக்கிறார் அகமது . ஆனால் அதற்கு அந்தப் பெண் மறுத்திருக்கிறார். ஆனால் கடந்த சில வாரங்களாகவே அந்த பெண்ணை தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார்.
அந்தப் பெண்ணும் தொடர்ந்து மறுத்து வந்ததால் ஆத்திரம் அடைந்த அகமது, அந்த பெண் மீது ஆசிட் வீசி இருக்கிறார். இதில் அந்த பெண்ணின் வலது கண் உடலின் பல பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது.
ஆசிட் வீசியதில் அகமது அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். அலறித் துடித்த அப்பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அகமதுவை பிடிக்க தேடி வருகின்றனர். இருவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றாலும் அந்தப் பெண்ணுக்கு அகமதுவை திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை.
ஆனால் கட்டாயப்படுத்தியிருக்கிறார் அகமது. அப்படியும் முடியாததால் ஆசிட் வீசி வெறிச் செயலில் ஈடுபட்டு இருக்கிறார். அந்த பெண்ணின் மூன்று குழந்தைகள் தாய்க்கு ஏற்பட்ட நிலைமையினால் கலங்கி நிற்கின்றனர்.
இந்த செயல் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.