மதுரை, கோவைக்கு மெட்ரோ எப்போது? மத்திய அரசு அனுமதிக்கல - ஏன்?
மெட்ரோ பணிகளுக்கு மத்திய அனுமதி வழங்கவில்லை என என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ திட்டம்
கோவை, மதுரைக்கு மெட்ரோ அமைக்க மத்திய அரசு அனுமதி இல்லாத காரணத்தால் இந்த இரண்டு திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.
சென்னை மெட்ரோவிற்கு நிதியை மத்திய அரசு கொடுத்தால் கோவை, மதுரை மெட்ரோ மீது அரசு கவனம் செலுத்த முடியும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முன்னதாக, கோவையில் மெட்ரோ பணிகள் இந்த வருடமே தொடங்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அங்கு 5 இடங்களை மையமாக வைத்து மெட்ரோ பணிகள் நடக்க உள்ளன. அவினாசி சாலை கணியூர் வரையில்தான் முதல் கட்டமாக இந்த திட்டம் கொண்டு வரப்படும். அவினாசி சாலை, திருச்சி சாலை வழியாக மெட்ரோ பாதை. சத்தி சாலை, சிறுவாணி சாலை வழியாக மெட்ரோ பாதை.
மத்திய அரசு அனுமதி?
மேட்டுப்பாளையம் சாலைகள் வழியாக மெட்ரோ பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளனர். மொத்தமாக, 139 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மறுபுறம், மதுரை மெட்ரோவில் 5 km தூரத்திற்கு Underground System (2 tunnels) செயல்படுத்தப்படும்.
கோவில் இருக்கும் பகுதிகளில், மைய பகுதிகளில் பூமிக்கு அடியில் மெட்ரோ அமைக்கப்படும். திருமங்கலத்தில் தொடங்கி ஒத்தக்கடை வரை மொத்த சிட்டி உள்ளேயும் பல்வேறு பகுதிகளை கடந்து இந்த மெட்ரோ பாதை செல்லும். இங்கவே மெட்ரோ 25 கிமீ வேகத்தில் மட்டும் செல்லும்.
அதிகபட்சம் 60 கிமீ வேகத்தில் செல்ல முடியும். இந்த பணிகள் 3 வருடம் நடக்கும். 2027ல் மெட்ரோ பணிகள் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.